பிரபாகரன் கொல்லப்பட்டதை விடுதலைப் புலிகள் சார்பாகப் பேசவல்லர் உறுதிப்படுத்தியுள்ளார்

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளைப் பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் என்பதை விடுதலைப் புலிகள் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் முதல் முறையாக ஒப்புக்கொண்டுள்ளனர்.

விடுதலைப் புலிகள் அமைப்புடைய சர்வதேச உறவுகள் பிரிவின் தலைவராக அறியப்படும் செல்வராசா பத்மநாதன் கையொப்பமிட்டுள்ள அறிக்கை இது.

பிபிசி தமிழோசைக்கு இவர் வழங்கிய ஓர் செவ்வியில், மே பதினேழாம் தேதி பிரபாகரன் உயிரிழந்ததாகத் தெரிவித்துள்ளார் என்றாலும், அவர் எவ்வாறு இறந்தார் என்பது பற்றிய விபரங்களை அவர் தெரிவிக்கவில்லை.

இலங்கைத் தமிழர்களின் உரிமைகளுக்காக வன்முறையற்ற வழிகளில் இனி விடுதலைப் புலிகள் போராடுவார்கள் என்றும் பத்மநாதன் தெரிவித்துள்ளார்.

source : bbc.co.uk

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...